Monday, 20 June 2016

ஜோதிடத்தின் ரகசியம்
ஒரு சிசு பிறப்பதற்கு முன்பே, கடவுள், அந்த சிசுவின் பாப புண்ணியத்துக்கு ஏற்பத்தான்,ஜனனத்தை கொடுக்கிறார். இதை யாராலும் எந்த சக்தியாலும் மாத்த முடியாது.
ஆகையால்., பெரியவர்கள்., தங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை, நான்கு ஜோதிடர்களிடம் தனித்தனியாக காண்பித்து ஒத்த கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒத்துவராத கருத்தை விட்டுவிடவும். பிறகு, அந்த ஜாதகத்தில் எது கொடுக்கப்படவில்லையோ, அதற்க்கு இவர்கள் முயர்ச்சிக்காமலும், அதில் ஆசை இல்லாமலும், அந்த குழந்தையை சிறுவயதிலேயே சொல்லிகொடுத்துவிட்டால், அதற்க்கும் புரியும்.
நமக்கு தேவை இல்லாததை, கற்பனையில் வளர்த்தால், அந்த குழந்தைக்குத்தான் பிற்காலத்தில் கஷ்டம்வரும்.
வாழ்க்கைக்கு தேவை நமக்கு மூன்று. இது இருந்தாலே நமக்கு நிம்மதி வந்துவிடும்.
1. உன்ன உணவு.
2. உறங்க ஒரு இடம்
3. உடுத்த உடை
இது இருந்தாலே அடுத்து நிம்மதி தானாகவே வந்துவிடும்.
அதிக ஆசைபடுதல், நடக்காது என்று தெரிந்திருந்தும், அதற்க்கு முயற்சி செய்து பிறகு தோல்வியினால், அகங்காரம்,மமகாரம்,கோவம்,தாபம்,சண்டாளம்,சண்டை, நிம்மதி இல்லை. இதுதான்.
எதையும் எடுத்துக்கொண்டு செல்லப்போவதில்லை. நமக்கு கிடைப்பதைவைத்துக்கொண்டு வாழ்பவனே பணக்காரன்.
ஒன்று வேண்டும் என்றால், ஒன்றை இழக்க நேரிடும்.
ஆகவே, நீங்கள் எதை வேண்டும் என்று நினைத்தாலும், ஆண்டவன், வேறு எதையோ நம்மிடம் இருந்து பிடுங்கப்போகிறான் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment