Monday, 20 June 2016

கஜகர்ணம்--, அஜகர்ணம்--, கோகர்ணம் --என்றால் என்ன?
திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூலில் இருந்து.
கஜகர்ணம் :
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் :
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம்:
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கடவுளிடம் சும்மா வெறுமனே வேண்டிக்கொள்வதால் மட்டும் காரியம் நடக்காது.
நீங்கள், கடவுளுக்கு எதையும் சமர்ப்பிக்க தேவை இல்லை. எதனால் என்றால், நீங்கள் சமர்பித்தது எல்லாமே கடவுளுடையதே ஆகும். நம்மிடம் என்ன இருக்கு சமர்பிக்க
ஆகையால், கடவுளிடம், பக்தி,விஸ்வாசம்,பிறருக்கு தக்க சமயத்தில்நம்மாள் ஆன உதவி செய்தல்.பொறாமை படாமல் இருத்தல், இவைகளை நாம் கடைபிடிக்கவேண்டும்./
உங்கள் வேண்டுதல் நியாயமானதாக இருக்க வேண்டும்
உங்களிடம் உண்மை இருக்கவேண்டும்
காரியம் தாமதம் ஆனாலும் நிச்சயமாக நமக்கு நன்மையே நடக்கும்
ஜோதிடத்தின் ரகசியம்
ஒரு சிசு பிறப்பதற்கு முன்பே, கடவுள், அந்த சிசுவின் பாப புண்ணியத்துக்கு ஏற்பத்தான்,ஜனனத்தை கொடுக்கிறார். இதை யாராலும் எந்த சக்தியாலும் மாத்த முடியாது.
ஆகையால்., பெரியவர்கள்., தங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை, நான்கு ஜோதிடர்களிடம் தனித்தனியாக காண்பித்து ஒத்த கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒத்துவராத கருத்தை விட்டுவிடவும். பிறகு, அந்த ஜாதகத்தில் எது கொடுக்கப்படவில்லையோ, அதற்க்கு இவர்கள் முயர்ச்சிக்காமலும், அதில் ஆசை இல்லாமலும், அந்த குழந்தையை சிறுவயதிலேயே சொல்லிகொடுத்துவிட்டால், அதற்க்கும் புரியும்.
நமக்கு தேவை இல்லாததை, கற்பனையில் வளர்த்தால், அந்த குழந்தைக்குத்தான் பிற்காலத்தில் கஷ்டம்வரும்.
வாழ்க்கைக்கு தேவை நமக்கு மூன்று. இது இருந்தாலே நமக்கு நிம்மதி வந்துவிடும்.
1. உன்ன உணவு.
2. உறங்க ஒரு இடம்
3. உடுத்த உடை
இது இருந்தாலே அடுத்து நிம்மதி தானாகவே வந்துவிடும்.
அதிக ஆசைபடுதல், நடக்காது என்று தெரிந்திருந்தும், அதற்க்கு முயற்சி செய்து பிறகு தோல்வியினால், அகங்காரம்,மமகாரம்,கோவம்,தாபம்,சண்டாளம்,சண்டை, நிம்மதி இல்லை. இதுதான்.
எதையும் எடுத்துக்கொண்டு செல்லப்போவதில்லை. நமக்கு கிடைப்பதைவைத்துக்கொண்டு வாழ்பவனே பணக்காரன்.
ஒன்று வேண்டும் என்றால், ஒன்றை இழக்க நேரிடும்.
ஆகவே, நீங்கள் எதை வேண்டும் என்று நினைத்தாலும், ஆண்டவன், வேறு எதையோ நம்மிடம் இருந்து பிடுங்கப்போகிறான் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

Saturday, 11 June 2016

அன்பர்களே.,இந்தமாதம் 18ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம் 12ம் தேதிவரை, முகநூலிற்கு அதிக நேரம் வர இயலாது.
12. 7. 2016 அன்று 60ம் கல்யாணம் என்பதால்.,நான் கீழ்கண்டபடி, பூஜைகளை செய்ய உத்தேசித்துள்ளேன்.
30 நாளைக்கு தினமும் காலையில் மகாபாரதம்
30 நாளைக்கு தினமும் மதியானம் ராமாயணம்
30 நாளைக்கு தினமும் மாலை நேரம் பாகவதம்
நடுவிலே வேத மந்திர ஜபங்கள்.
ஆகவே, 1 மாதத்துக்கு ஜோதிடம் பார்க்க இயலாது என்று நினைக்கிறேன்.
நடுவில் நேரம் கிடைக்கும்போது சிலமணித்துளிகள் வந்து பதிகிறேன். எல்லா நாட்களும்முடியாது.
ஆகவே, அனைவரும், பெரியோர்கள்,சான்றோர்கள்.எங்களை ஆசிர்வதிக்க
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
குருவின் பாதம் பணிந்து www.tkmoorthi.com

மனம்  எப்போதுமே  பாரத்துடன்  இருக்ககூடாது .

Friday, 10 June 2016

உங்கள் ஜாதகம் எப்படி  இருந்தாலும்  சரி.  இனி  கவலை  இல்லை.

நீங்கள்  தினமும்  செய்யவேண்டியது  இதுதான்.

காலையில் வெங்கடேச  சுப்ரபாதம்,ஆதித்திய  ஹ்ருதயம் இரண்டையும்  சொல்லிவாருங்கள்.

மாலை நேரத்தில் விஷ்ணு  சஹஸ்ரநாமம் ,ஹனுமான்  சாலீசா  சொல்லிவாருங்கள்.

வேறு  எந்த  சிந்தனையும்  வேண்டாம்.

அன்பாக,உறுதியாக,தெளிவாக,தூய  மனசுடன்  சொல்லிவரும்போதே உங்களுக்கு நல்லது  தெரியும்.